விவசாயிகள் பயிரிட்டு வளர்க்கும் கஞ்சா செடிகளுக்கு அடிமையான கிளிகள்.....

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (21:24 IST)
மத்திய பிரதேசத்தின் மாட்ச்சார் நீமுச், ரத்லம் மாவட்டங்களில் கஞ்சா செடிகளை கிளிகளை சாப்பிட்டு செல்லும் சம்பவம் அடிமையாகியுள்ளன.

மத்திய பிரதேசம் மாநிலத்தில்  முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள மாண்ட்சார், நீமுச், ரத்லம் ரத்லம் ஆகிய மாவட்டங்களில் கஞ்சா( (ஓபியம்) செடிகள் போதைப்பொருள் கட்டுப்பாடு வாரியத்தின் உரிமை பெற்று பயிரிடப்பட்டு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பயிர்கள் சிறியதாக இருக்கும்போது காற்கறி சந்தைகளில் விற்பனைக்கு  கொண்டு செல்லப்படுகிறது.  ஓபியமில் இருந்து மார்பீன் என்ற பொருள் பெறப்படும் நிலையில், ஓமியமில் இருந்து மன நலம், தூக்க மருந்துகள், தயாரிக்கப் பயன்படுகிறது. இங்கு, விளைவிக்கும் விவசாயிகளிடமிருந்து, மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது.

இந்த நிலையில், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஓபியம் எனப்படும் அபினி செடிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.ஆனால், இவற்றை சிலர் கடத்தி வருகின்றனர்.

இதிலிருந்து தயாரிக்கப்படும் போதைப்பொருள்களையும், சட்டவிரோதமான முறையில் விளைவிக்கும் செடிகளையும் போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர். அவர்களுக்கு சிறைத்தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த  நிலையில், ஆண்டுதோறும், ஓபியம் விதைகளைத் தேடி கிளிகள் படையெடுத்து..  விவசாயிகள் விதைக்கும் பருவத்தில், தினமும் 30 முதல் 40 விதைகளைத் தூக்கிச் செல்வதால் இழப்பு ஏற்படுகிறது.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கிளிகள் இவற்றை ஒருமுறை சாப்பிடுவதால் அதற்கு அடிமையாவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்