நிலநடுக்கத்தால் தெருவில் தஞ்சமடைந்ததாக நடிகை குஷ்பு டுவீட் !

புதன், 22 மார்ச் 2023 (15:05 IST)
டெல்லியில்   நிலநடுக்கத்தை உணர்ந்ததால் தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு டுவீட்  செய்துள்ளார்.
 

சமீபத்தில் துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்ககத்தால்  பல ஆயிரம்பேர் உயிரிழந்த நிலையில், அவ்வப்போது, பல நாடுகளில் நி நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நேற்று இரவு ஆப்கானிஸ்தானில் உள்ள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் இருந்த இந்த நிலநடுக்கம் காரணமாகத்தான் வட மாநிலங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் தெங்கிழக்கே 156 கிமீ தூரத்திலும், 184 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த  நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், சீனா, துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல் வெளியானது.

குறிப்பாக வட இந்தியாவில், டெல்லி, காஷ்மீர், உபி., ஸ்ரீநகர் உட்பட பல மாநிலங்களில் இந்த  நில நடுக்கம் உணரப்பட்டது.

டெல்லியில் வீட்டிலுள்ள கட்டில், சோபா, உள்ளிட்ட பொருட்கள் அதிர்ந்ததால்  பொதுமக்கள் வீட்டுகளை விட்டும் வெளியே வந்து சாலையில் குவிந்தனர்.

இந்த   நிலையில், தற்போது டெல்லியில் இருக்கும்  நடிகை குஷ்பு இதுபற்றி டுவீட் செய்துள்ளார். அதில், டெல்லி முழவததும்  பலத்த நில நடுக்கம் 4 நிமிடங்கள் வரை ஏற்பட்டது. வீட்டிலுள்ள மின்விசிறி மற்றும் விளங்குகள் அசைந்ததால் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சமடைந்ததாகக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்