138 சூதாட்ட செயலிகள் மற்றும் 93 கடன் செயலிகளை முடக்கிய மத்திய அரசு

ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (13:54 IST)
இந்தியாவில் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் கடன் செயலிகளை மத்திய அரசு தடை செய்து முடக்கியுள்ளது.

இந்தியாவில்,  பல சூதாட்ட செயலிகளும், கடன் செயலிகளும் இயங்கி வருகின்றன.

இந்தச் சூதாட்ட செயலிகளினால் மக்கள் பலர் அடிமையாவதும், பணத்தை இழந்து பாதிக்கப்படுவதும், இதன் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளுவது அதிகரித்தது.

அதேபோல், பல தனியார் நிறுவனங்களைப் போல் வெளி நாட்டைச் சேர்ந்த ஆன்லைன் மூலம்  கடன் வழங்கும் முறை அதிகரித்துள்ளது. இதன் மூலமாகவும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சீனாவுடன் தொடர்புடைய  138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 செயலிகளை தடை செய்ய மத்திய அரசு  நடவடிக்கை எடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்