பீகார் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்றார் நிதிஷ் குமார்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (14:31 IST)
பீகார் மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார் இன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து அவர் பீகார் மாநிலத்தில் எட்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வருவதற்காக நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார் இன்று எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகி உள்ளார் 
 
லாலு பிரசாத் யாதவ் கட்சியின் ஆதரவோடு முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார், மீதமுள்ள முழுமையான ஆண்டுகளில் பதவி வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
பீகார் மாநில முதல் அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாருக்கு நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்