முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஸ்குமார் ! பீகார் அரசியலில் பரபரப்பு !

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (17:00 IST)
நீண்ட காலமாக பீகார் அரசியலில் பாஜக - ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மோதல் போக்கு இருந்த நிலையில் இன்று முதல்வர்  நிதிஸ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
 பீகார் மாநிலத்தில்,  முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜன தா தளம், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
 
சமீபகாலமாகவே  நிதிஸ்குமாருக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில், பாஜக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும், பிரதமர் மோடி தலைமையிலான நிடி அயோக் நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்தார். இதற்கு பாஜகவின் விமர்சித்தனர்.
 
இந்த நிலையில்,  பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இனிமேல், ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறாது என கூறினார். 
 
இந்த நிலையில் இன்று மாலை  4 மணிக்கு முதல்வர் நிதிஸ்குமார் தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார். 
 
எனவே, தேசிய ஜன நாயகக் கூட்டணியில் இருந்து  ஐக்கிய ஜனதா எம்.பிக்கள் வெளியேறுவர் என அக்கட்சி எம்பிகள் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்