ஒடிஷாவில் மீண்டும் ரயில் விபத்து.. 6 பேர் பலியானதால் பெரும் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (07:26 IST)
ஒடிசாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர் என்பதும் உயிரிழந்தவர்களின் உடல்கள் சில இன்னும் அடையாளம் காணப்படாமல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இதில் ஆறு பேர் பலியாகி உள்ளதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதை அடுத்து ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
ரயில்வே பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்ததால், அதனால் அவர்கள் சரக்கு ரயில் அருகே ஒதுங்கி உள்ளனர், அந்த நேரத்தில் திடீரென சரக்கு ரயில் புறப்பட்டதால் அவர்கள் மீது சக்கரம் ஏறி ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. 
 
ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில் விபத்து மூலம் உயிர்கள் பலியாகி கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்