ஒடிசா : இன்ஜின் இல்லா சரக்கு ரயில் ஏறி 6 பேர் பலி

புதன், 7 ஜூன் 2023 (20:27 IST)
ஒடிசாவில் மழைக்காக ரயிலின் கீழ் ஒதுங்கிய  தொழிலாளர்கள்   6 பேர் மீது  இன்ஜின் இல்லாத ரயில் ஏறியதில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷாவில் கடந்த 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  275 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த ரயில் விபத்து இந்தியாவை உலுக்கிய நிலையில், இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு விபத்து நடைபெற்றுள்ளது. இன்று ஜஜ்பூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, மழையில் இருந்து தப்பிப்பதற்கான தொழிலாளர்கள் 4 பேர்  நின்று கொண்டிருந்த ரயிலின் கீழ் ஒதுங்கினர்.

அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இன்ஜின் இல்லாத சரக்கு ரயிலின் பெட்டிகள் தானாகவே நகர்ந்தது. இதில், ரயிலின் சக்கரத்தில் சிக்கி  6 பேர் வரை பலியானதாக தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்