ஒடிஷா ரயில் விபத்து:இறந்ததாக கூறப்பட நபர் எழுந்து வந்ததால் பரபரப்பு

புதன், 7 ஜூன் 2023 (17:50 IST)
ஒடிஷாவில் கடந்த 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  275 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாலாஷோர் ரயில்கள் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1207 பேரில் 1009 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து டிஸ்சார்ஸ் செய்துவிட்டதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

இந்த ரயில் விபத்து தொடர்பாக, நான்கு பிரிவுகளில் ஏற்கனவே இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது விபத்தின் போது பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள் சிலரின் செல்போன்களை சிபிஐ பறிமுதல் செய்வதுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்,  ஒடிஷா ரயில் விபத்து ஏற்பட்டபோது இறந்ததாக கருதி பாலசோர் அரசுப் பள்ளி அறையில்  பிணங்களோடு பிணங்களாக 3 வயதுள்ள நபரை போட்டு வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அவர்’’ இறக்கவில்லை… தான் உயிருடன் இருப்பதாகவும் தனக்கு தண்ணீர் வேண்டுமென்று’’ அந்த நபர் எழுந்து வந்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு கால்களும் இழந்த நிலையில் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்