CHATGPTக்கு போட்டியாக அம்பானியின் செயற்கை நுண்ணறிவு மாடல்.. என்ன பெயர் தெரியுமா?

Mahendran
வியாழன், 22 பிப்ரவரி 2024 (14:14 IST)
கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது என்பதும் இதனால் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்தது என்றாலும் வேலை எளிதில் முடிவதால் இந்த தொழில்நுட்பத்தை பலர் பயன்படுத்த தொடங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரை உலகம் உள்பட பல்வேறு துறைகளில் தற்போது இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக உலகம் முழுவதும் CHATGPT என்ற தொழில்நுட்பம் தான் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

மேலும் நிறுவனத்தின் பேர்ட் என்ற செயற்கை நுண்ணறிவு  தற்போது ஜெமினி என மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் CHATGPT, ஜெமினி போன்ற தொழில்நுட்பத்துடன் போட்டி போட அம்பானி ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கி வருவதாகவும் அதன் பெயர் அனுமான் என்றும் கூறப்படுகிறது

11 இந்திய மொழிகளில் செயல்படும் இந்த ஹனுமான் தொழில்நுட்பம் வரும் மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இந்த செயற்கை நுண்ணறிவு மாடல் வெளியானால் இந்தியர்களுக்கு அது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்