கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

Siva

வியாழன், 17 ஜூலை 2025 (07:51 IST)
ஆந்திராவில், கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக கூறப்பட்ட இளம் பெண் ஒருவரை, அவரது மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில், பாலகோடேரு என்ற பகுதியத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இறால் பண்ணையில் பணிபுரிந்து வருகிறார். அப்போது, அதே இடத்தில் பணிபுரியும் சுப்பாராவ் என்பவருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் அது காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்த தகவல் அறிந்த சுப்பாராவின் மனைவி, தனது உறவினர்களுடன் வந்து அந்த இளம் பெண்ணை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து, தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் கட்டி, உதைத்ததாக தெரிகிறது. அந்த பெண் வலி தாங்காமல் உதவி கேட்டு அலறிய போதிலும், யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என்றும், அதன் பிறகு காவல்துறை இது குறித்துத் தகவல் அறிந்து வந்த பின்னர்தான் அந்த பெண் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
 
இது குறித்து துணை ஆய்வாளர் ரவிவர்மா கூறிய போது, "நாங்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று, கட்டி வைத்திருந்த பெண்ணை விடுவித்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். தாக்குதலில் ஈடுபட்டுள்ள பெண் மற்றும் அவருடைய உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்