300 கோடி கலெக்‌ஷன் பிளாக்பஸ்டர் ஹனுமன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

vinoth

புதன், 14 பிப்ரவரி 2024 (11:16 IST)
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான 'ஹனுமான்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டி வருகிறது.  பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. இந்த படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

வழக்கமான தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹீரோ கதை போலவே உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபல தெலுங்கு படங்களை நக்கல் செய்வதால் கூடுதல் ஆதரவை இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படத்தோடு வெளியான இந்த படம் முதல் நாள் முதலே அபாரமான வசூலை ஈட்டி வந்தது.

இந்நிலையில் 25 நாட்களில் இந்த படம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் மெஹா பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக ஹனுமன் திரைப்படம் அமைந்துள்ளது.

இதையடுத்து இந்த திரைப்படம் ஜி 5 ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 8 ஆம் தேதி 5 மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்