தாய்ப்பாலை தானமாக வழங்கும் தாய்மார்கள்!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (16:46 IST)
தாய்ப்பாலை தானமாக வழங்கும் தாய்மார்கள்!
கர்நாடக மாநிலத்தில் தாய்பால் வங்கி திறக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த வங்கிக்கு தாய்ப்பாலை தாய்மார்கள் பலர் தானமாக வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கர்நாடக மாநிலத்தில் பிறந்த குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இந்த எண்ணிக்கையை குறைப்பதற்கு தாய்ப்பால் வங்கி தொடங்கி தாய்ப்பால் கொடுக்க முடியாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க ஏற்பாடு செய்யும் வகையில் அரசு செயல்பட்டது
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி இன்று திறக்கப்பட்டது. இந்த வங்கியில் தாய்மார்கள் தாய்ப்பாலை கொடையாக அளித்து வருவதாகவும் இதனால் பிறந்த குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்