ஊரடங்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதை தடுக்குமா..??

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:15 IST)
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை பாதிக்கப்படக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 

 
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த ஊரடங்கின்போது வாகனங்கள் அனுமதி இல்லை என்றும் எந்தவித வாகனப் போக்குவரத்தும் இருக்கக்கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதாவது தடுப்பூசி மையத்திற்கு செல்ல தடை விதிக்கப்படக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 
 
அதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் இருந்து தொற்று பரவாமல் இருக்க, மருத்துவமனையின் தனி கட்டடத்தில் தடுப்பூசி மையம் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்