தடுப்பூசி மூலம் கொரோனாவில் இருந்து மீண்ட முதல் நாடு இதுதான்!

திங்கள், 19 ஏப்ரல் 2021 (07:27 IST)
தடுப்பூசி மூலம் கொரோனாவில் இருந்து மீண்ட முதல் நாடு இதுதான்!
உலகமே கொரோனா வைரஸின் பிடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் செலுத்தி கொரோனாவில் இருந்து மீண்ட நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது இஸ்ரேல் நாடு என்பது குறிப்பிடதக்கது 
 
உலகை அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்து தடுப்பூசி மூலம் மீண்டு விட்டதாக இஸ்ரேல் நாடு அறிவித்துள்ளது. இதனை அடுத்து அந்நாட்டில் உள்ள மக்கள் முகக் கவசங்கள் இல்லாமல் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கிவிட்டனர் 
 
இஸ்ரேல் நாட்டில் உள்ள பொதுமக்களில் 68 சதவீத மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து அனைத்து கட்டுப்பாடுகளையும் அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது 
 
மேலும் முகக்கவசம் உள்ளிட்ட எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இஸ்ரேல் மக்கள் தெருக்களில் நடமாடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த கொரோனாவில் இருந்து மீண்ட முதல் நாடு என்ற பெருமையை இஸ்ரேல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்