மே 2ஆம் தேதி மட்டும் ஊரடங்கு பொருந்தாது: தேர்தல் ஆணையர் அறிவிப்பு

திங்கள், 19 ஏப்ரல் 2021 (07:11 IST)
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருப்பது என்பது தெரிந்ததே. நாளை முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் மே இரண்டாம் தேதி ஞாயிறு அன்று வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஞாயிறு என்பதால் முழு ஊரடங்கு அமலில் இருக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் 
 
மே இரண்டாம் தேதி ஊரடங்கு உத்தரவு பொருந்தாது என்றும் வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு பொருந்தாது என்றும் அறிவித்துள்ளார் 
இதனை அடுத்து மே இரண்டாம் தேதி வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதியில் ஊரடங்கு உத்தரவு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரம் இந்த விதிவிலக்கு தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் அன்றைய தினம் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்