அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

Siva

வெள்ளி, 13 ஜூன் 2025 (17:45 IST)
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, அதிமுக - பாஜக கூட்டணிக்கு செல்ல இருப்பதாகவும், 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க, அதிமுக மற்றும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மதிமுகவுக்கு ஆறு தொகுதிகள் வழங்கப்பட்டது.  ஆனால் அந்த ஆறு தொகுதிகளிலும் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்றதால், அவர்கள் திமுக வேட்பாளர்களாகவே கருதப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், வைகோவின் ராஜ்யசபா பதவி முடிந்த நிலையில், அவருக்கு மீண்டும் பதவி வழங்காததால் அதிருப்தியில் இருக்கும் மதிமுக, திமுக கூட்டணியை விட்டு வெளியேற இருப்பதாகவும், அதிமுக - பாஜக கூட்டணியில் அந்த கட்சிக்கு 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்