கர்நாடக மாநில தேர்தலில் ஆதரவு யாருக்கு? கமல்ஹாசன் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (17:27 IST)
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே பத்தாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 
 
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக பிரபலங்களும் ராகுல் காந்தி,  பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரபலங்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவு என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனது ரசிகர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இறையாண்மைக்கு ஆபத்து என்று யார் அழைத்தாலும் செல்வேன் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு ராகுல் காந்தி என்னிடம் கேட்டுக் கொண்டதால் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நல்ல முடிவு ஏற்பட இப்போது இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் அவர் பேட்டி அளித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்