10 ஐஃபோன்களை அசால்ட்டாக தூக்கிய டெலிவரி பாய்! – சிக்கியது எப்படி?

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (16:41 IST)
ஐஃபோன் ஆர்டர் செய்தவர்களுக்கு போலி ஐஃபோனை கொடுத்து ஒரிஜினலை விற்று பணம் பார்த்த டெலிவரி பாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல வகை ஸ்மார்ட்போன்கள் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் ஆப்பிள் ஐஃபோன் என்பது பயன்பாட்டை தாண்டி சமூகத்தில் தனது மதிப்பை உயர்த்தி காட்டும் ஒரு ஆடம்பர பொருளாகவே கருதப்படுகிறது. இளைஞர்கள் பலரும் ஐஃபோன் மேல் மோகம் கொண்டுள்ள நிலையில் அதை வாங்குவதற்காக குற்ற செயல்களில் ஈடுபடும் சில சம்பவங்கள் சில காலமாக காணக் கிடைக்கிறது. கருப்பு சந்தையிலும் ஐபோனுக்காக கிராக்கி அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஹரியானாவில் குருகிராமை சேர்ந்த ஒரு டெலிவரி பாய் 10 ஐஃபோன்களை நூதனமாக திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஐஃபோன், ஏர் பட்ஸ் போன்றவற்றை யாராவது ஆர்டர் செய்தால் அதை டெலிவரி கொடுக்க செல்லும் அவர் வீட்டில் யாரும் இல்லை என கூறி டெலிவரி நிறுவனத்திடம் அனுப்பியுள்ளார். ஐஃபோன்களை விற்பனை செய்யும் ரீடெய்லருக்கு அடிக்கடி இதுபோல ஐஃபோன்கள் ரிட்டர்ன் ஆனதால் அவர்கள் ஐஃபோன் பாக்ஸை பிரித்து சோதித்துள்ளார்கள்.

அதில் இருந்தது போலியான ஐஃபோன் என தெரிய வந்ததும் ரிட்டர்ன் வந்த மற்ற பார்சல்களிலும் போலியான ஐஃபோன்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். விசாரணை நடத்தப்பட்ட நிலையில் டெலிவரிக்கு போன்களை எடுத்து செல்வது போல சென்று தன்னிடம் இருக்கும் போலி ஐஃபோன்களை மாற்றி டெலிவரி பாய் செய்த நூதன திருட்டு தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு ஐஃபோனும் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடையவை. இந்த நூதன திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்