புதுச்சேரி யூனியனில் முதல்வர் ஆர்.என்.ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு, அர்சு சார்பு நிறுவனமான அமுதசுரபியில் சுமார் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டுகளாகவே ஊதிய உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று காந்திவீதியில் உள்ள அமுதசுரபி அலுவலகத்திற்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வந்தனர், அதில், 7 பேர் தாங்கள் மறைத்துவைத்திருந்த விஷதிதை எடுத்து குடித்தனர்.