காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் சூப்பர் ஸ்டார் நடிகரின் மனைவி: தீவிர பிரச்சாரம் செய்ய திட்டம்..!

வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (07:46 IST)
கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர், தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல கன்னட படங்களிலும் நடித்து வருபவர் சிவராஜ் குமார். இவருடைய மனைவி கீதா ஏற்கனவே அரசியலில் உள்ளார் என்பதும் கடந்த சில வருடங்களாக அவர் ஜனதா தளம் என்ற கட்சியில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவின் மகளான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்திருப்பதாகவும் இன்று அவர் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான சிவராஜ் குமாரின் மனைவி காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதை அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஆதரவு பெருகி உள்ளதாக தெரிகிறது. மேலும் சிவராஜ் குமார் மற்றும் அவரது மனைவி கீதா இருவருமே காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்