தேர்தலின் வெற்றிக்கு பின்னர் மோடிக்கு ஆதரவு தரலாமா என ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மண்ணை கவ்வியது. யாரும் எதிர்பாராத விதமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. 140 தொகுதிகளுக்கு மேல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30ஆம் தேதி ஆந்திர முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். அதோடு மோடியை ஆதரிக்கலாமா என ஆலோசனையிலும் ஈடுப்பட்டு வருகிறாராம்.
பிரதமர் நரேந்திர மோடியை இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து உள்ளிட்டவற்றை கேட்கவும் இதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.