ஆட்சி அமைக்க ஜெகன்மோகனுக்கு ஆளுநர் அழைப்பு

சனி, 25 மே 2019 (19:01 IST)
மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து விரைவில் ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க ஆந்திர ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
வரும் 30 ஆம் தேதி பிற்பகல் 12.23 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழாவிற்கு ஆளுனர் உத்தரவிட்டுள்ளார். இந்த விழாவில் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டியும் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். ஜெகன்மோகனின் அமைச்சரவையில் நடிகை ரோஜாவும் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
முன்னதாக ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்த மாநிலத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்