தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி.. கேள்விக்குறியாகும் இந்தியா கூட்டணி..!

Mahendran
சனி, 25 மே 2024 (09:07 IST)
பாஜகவை வீழ்த்த நாடு முழுவதிலும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்ற மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணிக்குள் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு வருவதாக பார்த்து வருகிறோம்.
 
குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் நேருக்கு நேர் போகின்றன. அதேபோல் கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நேருக்கு நேர் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது என்பதும் குறிப்பாக ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதிகளிலேயே கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜா நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வேறு சில பகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மோதுகின்றன என்றும் குறிப்பாக டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் வாக்களிக்கும் தொகுதிகள் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
அதேபோல் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாக்களிக்கும் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 ஏற்கனவே இந்தியா கூட்டணி மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒற்றுமை இல்லாமல் நேருக்கு நேர் தேர்தல் களத்தில் மோதி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்