ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

Mahendran

சனி, 18 மே 2024 (08:34 IST)
5ம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
பாராளுமன்ற தேர்தல் ஏற்கனவே 4 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் 49 தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி  5ம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 
49 தொகுதிகளில் ராகுல் காந்தி உள்பட மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் 
 
ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அதேபோல்  
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் களத்தில் இருக்கிறார். மேலும் மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் மீண்டும் களமிறங்கி உள்ளார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். 
 
மேற்கண்ட விஐபி தொகுதிகள் உட்பட 49 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது என்பதும் வரும் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த தொகுதிகள் அனைத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முக்கிய தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக ஐந்தாம் கட்ட தேர்தல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்