பற்கள் கோணலாக இருந்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன் !

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (18:58 IST)
சமீபத்தில், மோடி தலைமையிலான  மத்திய அரசு பாராளுமன்றத்தில் உள்ள  இரு அவைகளிலும் முத்தலாக் தடைச் சட்ட மசோதா நிறைவேற்றியது.  இது இஸ்லாமிய பெண்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் கோணலான பற்களைக் கொண்ட மனைவிக்கு  கணவன் முத்தலாக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் முஸ்தபா. இவரது மனைவி ருக்சனா பேகம். இருவருக்கும் கடந்த ஜீன் மாதம் திருமணம் நடைபெற்றது. 
 
இந்நிலையில், தீடீரென ருக்சபா பேகம் ஐதராபாத் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
 
அதில், என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதலாக வரதட்சனை கேட்டுக் கொடுமைப்படுத்தினர்.
 
அத்துடன் எனது பற்களின் வரிசை கோணலாக இருந்ததால் எனக்கு முத்தலாக் கூறியுள்ளார் என புகார் தெரிவித்துள்ளார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் முஸ்தபா மீது , வரதட்சனை கொடுமை, முத்தலாக் கூறுதல் ஆகியவற்றிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்