JIO- க்கு மாற்று BSNL -ஆ ? அரசுடன் மோதும் அம்பானி :அரசின் திட்டம் என்ன ?

புதன், 23 அக்டோபர் 2019 (20:35 IST)
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
நாட்டில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.தனது சேவையை பல ஆண்டுகளாக ஆற்றி வருகிறது. இந்நிலையில் அதன்வருவாயில் பெருமளவு பணம் அந்த நிறுவனங்களில்  ஊழியர்களுக்கே கொடுக்கப்பட்ட நிலையில், விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு சிறப்பு சலுகையும் அளித்துள்ளது.
 
இந்நிலையில், நாட்டில் தொலைத்தொடர்பு சேவையில் முக்கிய இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ சமீபத்தில் , அதன் வாடிக்கையாளர்க்ளுக்கு நிமிடத்துக்கு 6 பைசா விலையை நிர்ணயித்தது.
 
இப்படியிருக்க இன்று 4ஜி  போட்டியில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இறங்கியுள்ளது. பல கட்ட நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஜியோ குறித்து சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் தேசத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். படு ஸ்லோவாக உள்ளதுதான் மக்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

இனிமேல் 4ஜி சேவையில் பி.எஸ்.என்.எல். இயங்கும் என்பதால், நிச்சயமாக ஜியோ, ஏர்டெல், வோடபோனுக்கு  போட்டியாக பி.எஸ்.என்.எல். மாறலாம் எனவும் தகவல் வெளியாகிறது.
 
ஆனால் மத்திய அரசின் இந்த போட்டிகு ஜியோவை அறிமுகம் செய்து இந்திய தொலைத் தொடர்புத்துறையை தன் கைக்குள் கொண்டு வந்த வியாபாரச் சக்கரவர்த்தி முகேஷ் அம்பானியிடம் வேறு திட்டம் இல்லாமல் இருக்குமா என்ன ?ஆனால் அதற்கும் மத்திய சாமர்த்தியமாய் காய் நகர்த்தினால் இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியை தனது வாடிக்கையாளர்கள் ஆக்கிவிட முடியும் . அது அரசால் முடியாதா என்ன ?அதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பும் அரசின் பொறுப்புணர்வும் இன்னும் கூடுதலாகத் தேவைப்படுகிறது என்பதுதான் நிதர்சனம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்