ஏர்டெல், வோடபோன் ரூ.92000 கோடி செலுத்த உத்தரவு : நீதிமன்றம் அதிரடி

வியாழன், 24 அக்டோபர் 2019 (14:47 IST)
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ. 92000 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தொலைத்தொடர்பு கொள்கை வருவாயின் ஒரு பகுதியை நிறுவனங்கள் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 
இந்நிலையில் தொலை தொடர்பு நிறுவங்கள் தங்களது வருவாயை குறைத்துக் காட்டியதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது.
 
இதற்கு மத்திய அரசு ரூ. 1.33 லட்சம் கோடி கேட்டிருந்த நிலையில், இவ்வழக்கு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில் தொலைதொடர்பு நிறுவங்கள் ரூ. 92 ஆயிரம் கோடியை வழங்க உத்தரவிட்டுள்ளது.

எனவே,. இனிமேல் தொலைத்தொடர்பு நிறுவங்கள் தங்கள் விலையை உயர்த்தவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்