தனியார் நிறுவனமான ஜியோவின் வளர்ச்சிக்காகவே பிஎஸ் என் எல்-க்கு 4 ஜி கொடுக்க மறுப்பதாக அதன் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை இப்போது பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் 4 ஜி சேவைகளை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் இரு நிறுவனங்களுக்கும் புத்துயிர் அளிக்கும் விதமாக 30000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.