வழக்கு விசாரணையின் போது, "இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டுமா?", "மனுதாரர்கள் என்ன வாதங்களை முன்வைக்க விரும்புகிறார்கள்?" என இரு முக்கியமான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் உள்ளிட்டோர், வக்ஃப் சொத்தை மாவட்ட ஆட்சியர் தீர்மானிப்பது நியாயமா? இந்து அறநிலைய வாரியத்தில் இஸ்லாமியர்களை சேர்க்கப்போகிறீர்களா? போன்ற கேள்விகளை எழுப்பினர்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகே சட்டம் உருவானது” என்றும், “ஏற்கனவே வக்ஃப் சொத்தாக பதிவு செய்யப்பட்ட நிலைகள் செல்லுபடியாகும்” என்றும் பதிலளித்தார்.
மேலும், வக்ஃப் வாரியத்தில் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம் என்றும், மற்ற உறுப்பினர்கள் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.