டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

Mahendran

புதன், 16 ஏப்ரல் 2025 (19:44 IST)
இன்றைய கரன்சி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 85.68 என வர்த்தகம் முடிவடைந்தது.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளின் மீதான வரிவிதிப்பை 90 நாள் நிறுத்தி வைத்ததால், நேர்மறையான உள்நாட்டு மேக்ரோ பொருளாதார தரவுகளால் ரூபாய் வலுப்பெற்றதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
 
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.66 ஆக தொடங்கியது. அதன்பின் அதிகபட்சமாக ரூ.85.50 ஆகவும்,  குறைந்தபட்சமாக ரூ.85.72 ஐ தொட்டது. இறுதியில் 12 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக வர்த்தகம் முடிவடைந்தது.
 
நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயர்ந்து ரூ.85.80-ஆக இருந்தது. இது முந்தைய அமர்வில் அதாவது வெள்ளிக்கிழமை அன்று 58 காசுகள் உயர்ந்தது ரூ.86.10 ஆக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்