நிலச்சரிவு பகுதியில் சிதறிக் கிடந்த தங்க நகைகள்.! உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை..!!

Senthil Velan
சனி, 3 ஆகஸ்ட் 2024 (09:52 IST)
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே கிடந்த தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
 
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்து ஏராளமானோர் பலியாகினர்.
 
பாதிக்கப்பட்ட இடங்களில் 5-வது நாளாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ள நிலையில், படுங்காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும்  281 பேரை காணவில்லை. அவர்களை தீவிரமாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, நிலச்சரிவு உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்றுகேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே கிடந்த தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட நகைகள்,  விசாரணைக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்