வயநாடு நிலச்சரிவு விவகாரம்.. தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணை..!

Mahendran

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (15:43 IST)
வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.
 
வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து தானாக முன்வந்து விசாரணை செய்யும் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், கேரளாவில் உள்ள கோட்டயம், இடுக்கி, வயநாடு ஆகிய ஆட்சியர்கள் மீட்பு பணி மற்றும் சேத விவரங்கள் பற்றி அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிக்கை தரவும்,  நிலச்சரிவு பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரி, சாலை, கட்டுமான திட்டங்கள் பற்றிய விவரங்களை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதுமட்டுமின்றி வயநாடு நிலச்சரிவை பாடமாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் எடுத்த முன்னெச்சரிக்கை பற்றி அரசு அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து தமிழ்நாடு அரசு விரைவில் அறிக்கையை சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்