உபியில் வெள்ளி முதல் திங்கள் வரை ஊரடங்கு: அரசின் அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை முழு ஊரடங்கு என உபி அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணிவரை ஊரடங்கு என்றும் இந்த ஊரடங்கு நேரத்தில் கடைகள் திறக்க கூடாது என்றும் போக்குவரத்து அனுமதிக்கப் படாது என்றும் பழங்கள் பூக்கள் காய்கறிகள் உள்பட எந்த கடைகளுக்கும் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உபி அரசு எச்சரித்துள்ளது இதனால் அம்மாநில மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.