ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்றால் சம்பளத்தை குறைக்க வேண்டாம் - பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (21:23 IST)
கொரோனா வைரஸை மக்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என  பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, மார்ச் 22 ல் மாலை 5க்குள் வீட்டின் நுழைவாயிலில் நின்று மருத்துவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். பணிக்கு வரவில்லை ஊதியத்தை குறைக்காதீர்.22 ஆம் தேதி கொரோனா வைரஸூக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்.மருத்துவர்களுக்கு கைத்தட்டல்கள்,மணியோசை எழுப்பி உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டார்.
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பணிக்கு வரவில்லை என்றால் அவர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய வேண்டாம். 
 
மருந்து பொருட்கள் போன்றவற்றை யாரும் வாங்கி பதுக்க வேண்டாம் . கொரோனாவொடு போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ சேவைக்கு மேலும் அதிக பளுவை ஏற்றக்கூடாது. மருந்து பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்யப்படும். அதிலும் மருத்துவமனைகளில் குவிந்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். இந்தக் கொரானா இந்தியாவை பாதிக்காது என நினைப்பது தவறு என தெரிவித்துள்ளார்.
 
கொரோனாவை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவையாக உள்ளது. இந்தியர்கள் மிகுந்த மன தைரியத்துடன் கொரோனாவைரஸை எதிர்கொள்ள வேண்டும்.
 
அறுவை சிகிச்சைகாக நேரம் தேர்வு செய்திருந்தால் அதை தள்ளிப்போடுவது சிறப்பாக இருக்கும். இந்த கொரோனா வைரஸ் உலகப் போர் போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கொரோனா வைரஸால் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டாம்  பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் அதை தவிர்க்க குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்