இதற்கு முன் திருப்பதி கோவில் எப்போது மூடப்பட்டது? புதிய தகவல்
வியாழன், 19 மார்ச் 2020 (20:06 IST)
இதற்கு முன் திருப்பதி கோவில் எப்போது மூடப்பட்டது?
கொரோனா வைரஸ் பீதி காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதற்கு முன்னர் 128 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1892 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் திருப்பதிகோவில் மூடப்பட்டததாக தகவல்கள் வெளிவந்துள்ளது
128 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் திருப்பதி கோயில் மூடப்படுகிறது என்பதும்,
கொரோனா பாதிப்பு காரணமாக திருப்பதி தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
திருப்பதி கோவில் மூடப்பட்டு இருந்தாலும், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும் சுவாமிக்கு பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்னும் ஏழு நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் நிலைமைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளிவரும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை பக்தர்கள் யாரும் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது