கூண்டில் மனிதர்கள், சுதந்திரமாக விலங்குகள்: புதுச்சேரி கவர்னரின் கொரோனா டுவீட்

வியாழன், 19 மார்ச் 2020 (20:51 IST)
கூண்டில் மனிதர்கள், சுதந்திரமாக விலங்குகள்
கூண்டில் அடைபட்டிருந்த விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் சுதந்திரமாக சுற்றித் திரிந்த மனிதன் தற்போது கூண்டில் அடைபட்டு கிடப்பதாகவும் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்கள் கூண்டில் முக கவசம் அணிந்து இருக்கின்றார்கள் என்றும், கூண்டில் இருக்கவேண்டிய விலங்குகள் வெளியே சுதந்திரமாக இருப்பது குறித்தும் ஒரு புகைப்படத்தை கிரண்பேடி அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 
 
மேலும் அகிம்சை என்ற என்ற வார்த்தையை சொல்வது மட்டுமின்றி செயலிலும் உணவிலும் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு அகிம்சையையும், அகிம்சையை கடைபிடிக்கும் வகையில் சைவ உணவுகளை சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இது கொரோனா இல்லை, கர்மா என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதுவை ஆளுனரின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

Taking responsibility for who we consume?
It’s also about excercise of harmless choices.
Also about practicing non violence?
In word, deed and eat? @ANI @PTI_News @airnewsalerts pic.twitter.com/bGSji93qpi

— Kiran Bedi (@thekiranbedi) March 19, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்