இதனை அடுத்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மார்ச் 22 முதல் மார்ச் 29ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு சர்வதேச விமானங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் சிக்கிக்கொண்டு இந்தியா திரும்பாமல் இருக்கும் பலருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மார்ச் 22ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது மார்ச் 29ஆம் தேதிக்கு பின்னர் அவர்கள் இந்தியாவிற்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எந்த காரணத்தை முன்னிட்டும் வெளியே வரவேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. குழந்தைகளையும் முதியவர்களையும் மட்டும் கொரோனா அதிகம் தாக்குவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு பொதுமக்களுக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது