சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தியாவில் 168க்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் சர்வ தேச விமானங்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் கொரோனாபாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் தற்போது பேசி வருகிறார்.