எதையும் கேட்க மாட்டான் ...மகனை தூக்கிலிடுங்கள் : தாய் கோரிக்கை...

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (15:19 IST)
அண்மைக்காலமாய் சிறுமிகள் கற்பழிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எத்தனை கடுமையாக சட்டங்கள் உள்ள போதிலும் இது குறித்த அலட்சியப்பார்வையுடன் தொடர்ந்து தவறுகள் நிகழ்ந்து வருவது நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலமான குஜராத்தில் உள்ள மாவட்டத்தில் 14 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த குற்றத்தை செய்த பீஹார் மநிலத்தைச் சேர்ந்த்வனை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து பலமாக அடித்துள்ளனர்.
 
இதனால் அங்கு வசித்த பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மக்களும் வலுக்கட்டாயமாக அவ்வூரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
எனவே இதுகுறித்த விஷயம் உடடியாக குஜராத் அரசு கண்டனம் தெரிவித்தது.போலீஸார் குற்றவாளியை  பிடித்து விசாரிக்கையில் அவன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. அவனைக் கைது செய்த போலீஸார் இந்த விவரத்தை பீஹார்ல் வசிக்குன் அவனது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
 
அப்போது அவன் தாயார் கூறியதாவது:
 
கடந்த இரண்டு வருஷங்கலுக்கு முன்பு அவன் வீட்டை விட்டு (பிஹார்)வெளியெறியதாகவும் ,எப்போதும் யாருடைய பெச்சையும் அவன் கேட்க கேளாதவனாகவும் நண்பர்களுடன் சேர்ந்து திரிந்துவந்தான். அவன் குற்றவாளி என்று தெரிந்தால் அவனை தூக்கிலிடுங்கள் மற்றவர்களை எதுவும் செய்யாதீர்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்