மகள் கலப்பு திருமணம் ; மருமகனை கொன்ற தந்தை

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (22:49 IST)
கர்நாடகாவில் உள்ள பாகல்கோட்டில் தந்தை தன் மகள் கலப்பு திருமணம் செய்ததற்காக நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமண்டி என்ற தாலூகாவில் தக்கோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் புஜபலி கர்ஜகி(34). இவர் அதே கிராமத்தில் வசிக்கும் பாக்யஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருமனதாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்தவர் என்ற நிலையில், இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு புஜபலி மற்றும் அவரது உறவினர் சுமேத் இருவரும் கோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தபோது, பாக்யஸ்ரீயின் தந்தை மற்றும் 3 உறவினர்கள் சேர்ந்து புஜபலியை தாக்கினர். சுமேத் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்த தாக்குதலில் பாக்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்