இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Prasanth Karthick

வியாழன், 27 ஜூன் 2024 (20:52 IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கனமழை பெய்து வருகிறது. சமீபமாக மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. வால்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

இந்நிலையில் இன்று இரவு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்