திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

J.Durai

வியாழன், 27 ஜூன் 2024 (23:35 IST)
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டராக  பதவி வகித்து வருபவர்  மகாபாரதி.
 
இவர்  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு முகாமிற்கு சென்றுள்ளார்.
 
அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து அவரை தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக  சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அவருக்கு இருதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இரவு பகல் பாராது ஓய்வின்றி மாவட்ட வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும்  பாடுபடும் கலெக்டர் நலமுடன் திரும்ப அரசு ஊழியர்களும் பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்