கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லையில் பதற்றம்: பின்னணி என்ன??

வியாழன், 8 டிசம்பர் 2022 (09:02 IST)
வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் பெலகாவி மாவட்டத்தின் எல்லையில் மகாராஷ்டிராவுக்கான தனது சேவைகளை நிறுத்தியுள்ளது.  


பெலகாவி மாவட்டத்தின் எல்லையில் சில பேருந்துகள் சிதைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் வெளிவந்ததை அடுத்து, வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் மகாராஷ்டிராவுக்கான தனது சேவைகளை நிறுத்தியுள்ளது. பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று இரு மாநிலங்களும் கோரி வருகின்றன.

மகாராஷ்டிராவுக்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 லட்சம் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகாவை நோக்கி இயக்கப்படும் 60 பேருந்துகளின் சேவைகளையும் மகாராஷ்டிரா அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

இருப்பினும், தற்போதைக்கு பயணிகள் இறங்கி அந்தந்த இடங்களின் பேருந்துகளில் ஏறும் எல்லை வரை இரு தரப்பிலிருந்தும் ஒரு சில பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், பேருந்துகளை சேதப்படுத்தியதைத் தொடர்ந்து, கர்நாடக ரக்ஷனா வேதிகே மீண்டும் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தியது. பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தாங்களும் இதேபோன்ற வீரியத்துடன் பதிலடி கொடுப்போம் என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவி வருவதால், இரு தரப்பிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்துகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா எல்லை மாவட்டத்தில் கணிசமான மராத்தி மொழி பேசும் மக்கள் இருப்பதால் பெலகாவியை இணைக்க வேண்டும் என்று கோரி வருகிறது. ஆனால், அவர்களின் கோரிக்கையை கர்நாடக அரசு நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்