விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

Mahendran

வியாழன், 27 ஜூன் 2024 (21:48 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் நேற்று வரை 63 பேர் பலியாகி இருந்த நிலையில் இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மகேஷ் என்பவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 64 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வருவதால் இனி பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டு வருகிறது
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்