கர்நாடகாவில் முதல் ஜிகா வைரஸ்! 5 வயது சிறுமிக்கு உறுதியானது!

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (10:04 IST)
கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ்களில் ஆபத்தான வைரஸ்களில் ஒன்றாக ஜிகா வைரஸ் கருதப்படுகிறது. கடந்த 2016ல் பிரேசிலில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் தொற்று உலக நாடுகள் பலவற்றிற்கு பரவியுள்ளது.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னதாக மகாராஷ்டிராவில் புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் முதன்முறையாக கர்நாடகாவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்