இதெல்லாம் ஒரு விஷயமா? மாணவரை பயங்கரவாதியுடன் ஒப்பிட்ட விவகாரம்! – அமைச்சர் அலட்சிய பதில்!

புதன், 30 நவம்பர் 2022 (09:07 IST)
கர்நாடகாவில் பேராசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள மணிபால் தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் மாணவரை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.வி.நாகேஷ் பேசியபோது “இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அந்த ஆசிரியர் மாணவரை அப்படி பேசியிருக்கக்கூடாது என்றாலும், இது ஒரு தீவிரமான விஷயம் இல்லை என்று நான் நினைக்கிறேன். மாணவர்களை ராவணன், சகுனி என்றெல்லாம் கூட அழைக்கிறோம். ஆனால் அது ஒருபோது பிரச்சினைக்கு உள்ளாவது இல்லை.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ‘கசாப்’ என்ற பெயர் மட்டும் ஏன் சர்ச்சைக்குள்ளாகிறது என தெரியவில்லை. நான் எதையும் ஒப்பிடவில்லை. இதை சில அரசியல் கட்சிகள் அரசியலாக்க பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்