சகோதரியை நடுரோட்டில் வைத்து அடித்த சகோதரர்கள் : பரவலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (21:25 IST)
மத்தியபிரதேசம்  மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணோருவர் வேறு வகுப்பைச் சேர்ந்த ஒரு ஆணைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறினார். அதனால் அவரது அண்ணன்கள் மற்றும்  உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்..
இந்நிலையில் இந்நிலையில் அந்தப்பெண்ணை ஒழுவழியாகக் கண்டுபிடித்த போலீஸார் அப்பெண்ணை வீட்டில் ஒப்படைத்தனர்.இதனையடுத்து அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்துவைக்க முயன்றனர். அதற்கு அப்பெண்  மறுத்ததாகத் தெரிகிறது.
 
இதனால் ஆத்திரம் கொண்ட பெண்ணின்  சகோதர்கள்,  தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி நடுரோட்டில் வைத்து அப்பெண்ணை அடித்து துன்புறுத்தினர். மேலும் நீளமான குச்சிகளாலும் அப்பெண்ணைக் கொடூரமான முறையில்  தாக்கினர்.  இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்