மோடியின் கனவை நனவாக்க 1380 ஹெக்டேர் நிலம் அழிக்கப்படுகிறதா?

செவ்வாய், 25 ஜூன் 2019 (12:49 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக 1380 ஹெக்டேர் விவசாய நிலங்களும், காடுகளும் அழிக்கப்படுவதாக காங்கிரஸ் புகார் எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள மும்பையிலிருந்து குஜராத்தில் உள்ள அகமதாபாத் வரை புல்லட் ரயில் சேவையை கொண்டு வருவது மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று. கடந்த வருடம் மே மாதம் இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த திட்டம் ஜப்பானின் ஆதரவோடு செயல்படுத்தப்பட இருக்கிறது.

இதற்காக ஜப்பான் சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மீத தொகையை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர சட்டசபையில் பேசிய சிவசேனா உறுப்பினர் “புல்லட் ரயில் திட்டத்துக்காக 32 ஏக்கரில் உள்ள 42000 சதுப்பு நில மரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பல விவசாயிகளும் பாதிக்கப்படுவர்” என புகார் எழுப்பினார்.

அவருடைய புகாருக்கு பதில் அளித்த மகாராஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர் “புல்லட் ரயில் சேவைக்கான இருப்பு பாலங்கள் உயரமான தூண்கள் அமைத்து அதன் மேல்தான் அமைக்கப்பட உள்ளன. எனவே எந்த விதத்திலும் இது காடுகளையும், விவசாயிகளையும் பாதிக்காது. தூண்கள் அமைப்பதற்காக ஒரு மரம் வெட்டப்பட்டால் நான்கு மரங்கள் நட்டு வளர்க்கப்படும்” என தெரிவித்தார்.

இதன் மூலம் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவையை பிரதமர் அவரது மாநிலத்தில் தொடங்க ஆர்வம் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்