இந்த நிலையில், திமுக, அதிமுக கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காதவர்கள் விஜய் கட்சிக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அவர்களால் விஜய் கட்சிக்கு எந்த அளவுக்கு லாபம் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அருண் ராஜ், ஐ.ஆர்.எஸ். பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு விஜய் கட்சிக்கு வந்திருக்கிறார் என்றால், அவருக்கும் விஜய்க்கும் பத்தாண்டு காலம் நெருங்கிய நட்பு என்றும், விஜய்க்கு வருமானவரித் துறை சோதனை வந்தபோதெல்லாம் அவர்தான் காப்பாற்றினார் என்றும் கூறப்பட்டு வருகிறது.