ரயில் தண்டவாளத்தில் வாலிபர்! நொடிப் பொழுதில் உயிர் தப்பிய அதிசயம் ! வைரல் வீடியோ

வெள்ளி, 28 ஜூன் 2019 (13:52 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்ந்த ஒரு இளைஞர் ஒருவர் ரயிலைக் கடக்க முயன்றார். அப்போது ரயில் ஒன்று வேகமாக வந்தது... ஆனால் அந்த ரயிலில் அடிபடாமல் இளைஞர் நொடிப்பொழுதில் உயிர்தப்பிய சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அசாங்கா என்ற இடத்தில் இளைஞர் ஒருவர், ஒரு ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். 
 
அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக அதிவேகமாக ஒரு ரயில்வந்தது. ஆனால் அந்த இளைஞர் நடைமேடைக்கும், ரயில்மேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். ஆனால் எப்படியோ அவரது நேரம் அந்த ரயிலில் சிக்காமல் உயிர் தப்பிக்கொண்டார். அதனால் அங்கிருந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
 
அங்கிருந்த வீடியோ ஒன்றில் பதிவாகியிருந்த இந்தக் காட்சி, தற்போது சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்